திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு பத்து மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக- பாஜக கட்சிகள் கூட்டணியைப் பலப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், மாநில மாநாட்டை மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தலை எதிர்கொள்ள திமுகவும் முன்கூட்டியே தயாராகி வருகிறது. இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்தில் 'ஓரணியில் தமிழ்நாடு-உறுப்பினர் சேர்க்கை' தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.