*நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல்போன் செயலி மூலம் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.*
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு இருகட்டங்களாக அடுத்த ஆண்டு 2027 மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளது.
லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் பகுதிகளில் 2026 அக்டோபர் 1-ம் தேதி கணக்கெடுப்பு தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ” நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல்போன் செயலி மூலம் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆங்கிலம், இந்தி, பிராந்திய மொழிகளில் செல்போன் செயலிகள் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவு செய்யப்படும்.செயலியில் பதிவு செய்யப்படும் விவரங்கள் உடனுக்குடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணைய சர்வருக்கு அனுப்பபடும். பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களை பதிவு செய்யவும் வலைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் பகுதியாக வீடுகள் கணக்கெடுக்கும் பணிகள் 2026 ஏப்ரல் மாதம் தொடங்கும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது