‘புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்’
திமுக கூட்டணி சார்பில் நடிகர் கமலஹாசன் ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் ரஜினிகாந்த் சந்தித்தார். இந்நிலையில் வருகிற 25-ந் தேதி மாநிலங்களவையில் எம்பியாக பதவி ஏற்க உள்ளார்.
இதையடுத்து எம்பி யாக பதவியேற்க உள்ள கமலஹாசன் அதற்கான கடிதத்தை எடுத்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், என்னுடைய புதிய பயணத்தின் தொடக்கத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன் மகிழ்ந்தேன் என்றார்.