கடந்த இரண்டு வாரங்களில் ஜப்பாளில் 900 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளை அதிகம் சந்திக்கும் நாடாக ஜப்பான் உள்ளது. பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
ஜப்பானில் கடந்த 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள டோகாரா தீவுக்கூட்டத்தில் பதிவாகியுள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். குறிப்பாக, புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.
இதனால் நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் தயார் நிலையில் இருக்குமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கங்கள் ஒரு பெரிய நிலநடுக்கத்திற்கான அறிகுறியாக இருக்குமோ என்ற அச்சமும் நிலவுகிறது.
இங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில், எப்போது வேண்டுமானாலும் அப்பகுதியை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படலாம் என்று பொதுமக்களை அரசு எச்சரித்துள்ளதால் மக்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.