Hot News :
For Advertisement Contact: 9360777771

காஞ்சி சங்கராச்சாரியாரிக்கு திருப்பதியில் பிக்ஷாவந்தனம் நிகழ்ச்சி

© News Today Tamil

*காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிக்கு*

*மதுரை பொதுமக்கள் சார்பில்*

*திருப்பதியில் ஜூலை 29ல் பிக்ஷாவந்தனம் நிகழ்ச்சி*

காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிக்கு மதுரை மக்கள் சார்பில் திருப்பதியில் பிக்ஷாவந்தனம் நிகழ்ச்சி வருகிற 29ஆம் தேதி நடக்கிறது.  

இதுகுறித்து மதுரை பிக்ஷாவந்தன கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

இந்து சமயத்தில், ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரை, துறவிகள் 'சாதுர்மாஸ்ய விரதம்' கடைப்பிடிப்பர். இந்த நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கி, வேத, வேதாந்தங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வர். இம்மாதங்களில் துறவிகள் உணவு முறையில் கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வர்.

காஞ்சி ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமிகள் காமகோடி பீடத்தின் இரு ஆச்சாரியார்களும் திருப்பதி விநாயக் நகர், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகின்றனர். இதையொட்டி மதுரை பக்த ஜனங்கள் சார்பில் ஜூலை 29 ஆம் தேதி, காலை 8 மணிக்கு சிறப்பு பிக்ஷாவந்தனம் மற்றும் பாத பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுரை பிக்ஷாவந்தன கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில், எல்.வெங்கடேசன், வி.ஸ்ரீராமன், வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணன், நெல்லை பாலு, ஆடிட்டர் ஏ.பி.சுந்தர், தொழிலதிபர் எம். ஆர். பிரபு, கே.சிவராமன் உட்பட 11 பேர் கொண்ட கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

மதுரையில் வாழும் காஞ்சி சங்கராச்சாரியார் பக்தர்கள், மேற்கண்ட பிக்ஷாவந்தன நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்வாமியின் அருள் பெற அழைக்கிறோம். . நன்கொடை அளிக்க எல். வெங்கடேசன் 9442052198,, வி.ஸ்ரீராமன் 90253 02029 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பணம் அனுப்பலாம்.

இவ்வாறு, மதுரை பிக்ஷாவந்தனம் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post காக்கா வடை தூக்கியதுபோல், தங்க நகையை தூக்கிய காக்கா
Next Post ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் கமலஹாசன்
Related Posts