பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோட்டா சீனிவாச ராவ்(83) தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர். இவர் 2003ஆம் ஆண்டு வெளியான நடிகர் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்த சாமி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அவரது வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
விஜய்யின் திருப்பாச்சி, சிம்புவின் குத்து, சரத்குமாரின் ஏய், ஜீவாவின் கோ, உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். ஹைதராபாத் நகரில் உள்ள ஃபிலிம் சிட்டி சிகிச்சை பெற்றுள்ளார். நிலையில்தான் இவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்.