மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலை மீது மர்ம நபர்கள் கறுப்பு பெயின்ட் வீசிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், அண்ணா பூங்கா முன்பு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவச்சிலை உள்ளது. இந்த சிலையின் மார்பு மற்றும் கால் பகுதியில் கருப்பு பெயின்டை மர்ம நபர்கள் நள்ளிரவில் ஊற்றிச் சென்றுள்ளனர்.
இந்த தகவல் அறிந்ததும் திமுகவினர் அங்கு குவிந்தனர். கலைஞர் சிலையில் பெயின்ட் ஊற்றி அவமதித்தது யார், என்ன காரணம் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலைஞர் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் ஊற்றப்பட்ட சம்பவம் சேலம் மாவட்ட திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.