டோல்கேட் FASTag ஆண்டுக்கு 3000 மட்டுமே!!!
2025 சுதந்திர தினம் முதல்...
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் தனியார் வாகனங்கள் சுங்க சாவடிகளில் நீண்ட நேரம் நிற்காமல் செல்ல ஏதுவாக ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தும் புதிய பாஸ் டேக் நடை முறை வரும் சுதந்திர தினம் முதல் அறிமுகமாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகள் மூலம் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் ஒவ்வொரு முறை கடக்கும் போதும் வசூலிக்கப்படுகிறது. ஃபாஸ் டேக் முறை கொண்டு வந்த போதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் அடிக்கடி ஃபாஸ்டேக்கில் ரீசார்ஜ் செய்ய வேண்டி உள்ளது.
ரீசார்ஜ் சிரமத்தை போக்கவும் நீண்ட நேரம் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் சுதந்திரமாக செல்லவும் சாலைப்போக்குவரத்து துறை புதிய நடைமுறை கொண்டுவரப்படும் என அறிவித்தது. அதன்படி கமர்சியல் இல்லாத தனியார் வாகனங்கள் ஆண்டுக்கு 3000 ரூபாய் மட்டும் செலுத்தி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கலாம் என்ற திட்டத்தை அறிவித்தது.
அது எப்போது நடைமுறைக்கு வரும் என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது நிதின் கட்கரி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நிதின் கட்கரி தனது X தளத்தில் உள்ள பதிவில், ஆண்டுக்கு 3000 ரூபாய் மட்டும் செலுத்தும் பாஸ்ட் ட்ராக் நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆண்டு கட்டணம் செலுத்திய நாள் முதல் 200 ட்ரிப்ஸ் அல்லது ஓராண்டு இதில் எது முன்பாக வருகிறதோ அதுவரை ஃபாஸ்டேக் செல்லுபடி ஆகும்.
கட்டணம் செலுத்துவது Rajmarg yatra app அல்லது NHAI அல்லது MoRTH அலுவலக வெப்சைட்டில் சென்று ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.