Hot News :
For Advertisement Contact: 9360777771

ரேஷன் கடையை மொத்தமாக ஆட்டைய போட்ட ரேஷன் கடைஊழியர்.

© News Today Tamil
மொத்த ரேஷன் கடையை ஆட்டைய போட்டு தலைமறைவான ரேஷன் கடைஊழியர்.

 வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.


 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட அய்யனார் குளம் ஏ ஆண்டிப்பட்டி உப்பட 3 ரேஷன் கடைகளுக்கு பொறுப்பாக இருந்தவர் கிருஷ்ணன். இவர் ரேஷன் கடைகளில் உள்ள 6 டன் ரேஷன் அரிசி(6046), 327 கிலோ சீனி, 215 கிலோ துவரம்பருப்பு, 532 லிட்டர் பாமாயில், 270 கிலோ கோதுமை ஆகியவற்றை மொத்தமாக கடத்திச் சென்று விற்பனை செய்துள்ளார்.
 இது குறித்து கடை ஊழியர்களுக்கு தெரிய வர பொது விநியோகத் திட்ட துணை பதிவாளரிடம் புகார் செய்தனர். 
 பொதுவிநியோகத் திட்ட துணை பதிவாளர் ஆசைத்தம்பி, மயிலை நாதன் ஆகியோர் விசாரணை கொண்டதில் கடத்தப்பட்டது உண்மையான தெரிய வந்தது.
 இதை எடுத்து மதுரை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
 உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் செந்தில் இளைஞரணி ஆலோசனையின் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரேஷன் கடை ஊழியர் கிருஷ்ணனை தேடி வருகின்றனர். 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.
Next Post இன்றைய பஞ்சாங்கம்
Related Posts