Hot News :
For Advertisement Contact: 9360777771

எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்க வழக்கு

© News Today Tamil

தமிழகத்தில் உள்ள எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படுள்ளது. 


தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆதித்ய சோழன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

அதில், தமிழகத்தில் தற்போது பதவியில் உள்ள எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மற்றும் முன்னாள் எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததாக கூறியுள்ளார். 

மேலும், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நிலை குறித்த விவரங்களை வழங்குமாறு கோரியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்ததாகவும், இருப்பினும் தகவல்கள் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார். 

பொது மக்கள் நலன் கருதி கேட்கப்பட்ட தகவல்களை தர மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்க வேண்டுமென மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post பாரம்பரிய உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்களின் வருடாந்திர அறிக்கைகள் தவறாக இருந்தால் சிறை அல்லது அபராதம்
Next Post சிவகங்கை மாவட்ட எஸ் பி யாக சிவப்பிரசாத் ஐபிஎஸ் நியமனம் தமிழகம் முழுவதும் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
Related Posts