கன்னடத்து பைங்கிளி என்று தமிழக ரசிகர்களால் போற்றி புகழப்பட்ட நடிகை சரோஜாதேவி இன்று இயற்கை எய்தினார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை சரோஜாதேவி. இவரது இயற்பெயர் ராதா தேவி கவுடா.
1938 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பிறந்தவர். தற்போது அவருக்கு 87 வயது ஆகிறது. 1955ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
மறைந்த நடிகர் எம் ஜி ஆர் உடன் நடித்து ஆடிய 'லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ்' என்ற பாடல் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. தமிழக ரசிகர்களால் கன்னடத்துப் பைங்கிளி என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். திரைத்துறையில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரை கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இவரது நடிப்பிற்க்காக பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் நான்கு தலைமுறைகளை கண்ட ஒரே நடிகை ஆவர். உடல் நலக்குறைவு காரணமாக இன்று அவர் இயற்கை எய்தினார்.
அவரது மறைவு கேட்டு திரைப்படத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தகவல் அறிந்து திரைப்படத்துறையினர் அனைவரும் அவரது வீடு நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.