அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது.
மழை வெள்ளத்தில் 15 குழந்தைகள் உட்பட 51 பேர் இறந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் குவாலுடப் பகுதியில் உள்ள கோடைகால சிறப்பு முகாமில் தங்கி இருந்த 27 சிறுமிகளையும் காணவில்லை.
மழை வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் ட்ரோன் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் மற்றும் மீட்பு பணி படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு பலத்த மழை பெய்ததால் அந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.