Hot News :
For Advertisement Contact: 9360777771

அதிமுக கூட்டணியில் பாமக?: அன்புமணி ராமதாஸ் சூசகம்!

© News Today Tamil

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று பாஜக கூறி வரும் நிலையில், தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாமகவும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி.

தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று கூறி வரும் நிலையில், ஆளும் அரசில் பாமகவும் பங்கேற்க வேண்டும் என்று அன்புமணி கூறியது, பாஜக கூட்டணியில் இடம் பெறுவதற்குத்தான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post மதுரையில் ஆக-25ல் மாநில மாநாடு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Next Post காக்கா வடை தூக்கியதுபோல், தங்க நகையை தூக்கிய காக்கா
Related Posts