திருப்புவனம் லாக்கப் கொலை வழக்கில் நேரடி சாட்சிக்கு பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு மனு.
தனிப்படை போலீசின் ரவுடி நண்பர்கள் மிரட்டுவதாக புகார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் ஊழியர் அஜித் குமார். குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணையின் போது மானாமதுரை டிஎஸ்பி தனி படை போலீசார் 5 பேரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசார் அஜித்குமாரை தாக்கும் வீடியோவை கோயில் ஊழியர் சக்தீஸ்வரன் என்பவர் தனது மொபைல் போன் மூலம் படம் பிடித்திருந்தார்.
ஐகோர்ட் மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது தாக்கல் செய்தார்.
இதனால் கோயில் ஊழியர் சக்திஸ்வரன் நேரடி சாட்சியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் கோயில் ஊழியர் சத்தீஸ்வரன் தமிழக டிஜிபிக்கு எழுதி உள்ள கடிதத்தில், அஜித் குமாரை அடித்து கொலை செய்த தனிப்படை போலீசாரில் முதல் குற்றவாளியாக உள்ள ராஜா என்பவர் பல்வேறு ரவுடிகளுடன் நேரடி தொடர்பில் உள்ளார். அதில் ஒரு ரவுடியை சந்திக்க நேர்ந்த போது நேரடியாக மிரட்டல் விடுத்தார். எனவே எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும் ஐகோர்ட் உத்தரவு படியும் அஜித் குமார் கொலை வழக்கின் முதல் சாட்சியான எனக்கும் மற்ற சாட்சிகளுக்கும் திருப்புவனம் அல்லாத வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.