போக்சோ சட்டம் விழிப்புணர்வு நூல் வெளியீட்டு விழா.. மூத்த வழக்கறிஞர் சாமிதுரை எழுதியது
ஐகோர்ட் நீதிபதி விக்டோரியா கௌரி வெளியிட ஹைடெக் அராய் நிறுவனம் முதுநிலை மேலாளர் சண்முகசுந்தரம் பெற்றுக் கொண்டார்.
இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தூய்மை விழிகள் அறக்கட்டளை இணைந்து மூத்த வழக்கறிஞர் கு சாமிதுரை எழுதிய 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றமும் போக்சோ சட்டமும்' என்ற நூல் மற்றும் ப்ரைலி முறை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு இந்திய வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கலையரசி பாரதி, எம். எஸ். செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் சி. ஆர். சுப்ரமணியம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சென்னை ஐகோர்ட் நீதிபதி விக்டோரியா கௌரி நூலை வெளியிட மதுரை ஹைடெக் ஆராய் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் மற்றும் திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் பெற்றுக் கொண்டார்.
லேடி டோக் கல்லூரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் ராமசுப்பையா, அரசு சட்டக் கல்லூரி முதல்வர் குமரன், வைகை பொறியியல் கல்லூரி முதல்வர் சிவரஞ்சனி,
நூலை எழுதிய வழக்கறிஞர் கு. சாமித்துரை, துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பாரதி மற்றும் தூய்மை விழிகள் அறக்கட்டளை நிறுவனர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.