தமிழ்நாடு வணிகவரி துறை உயர் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வணிகவரித் துறையில் இதனால் வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வரி விதிப்பு வருவாய் குறித்தும், வரும் நிதியாண்டுக்கான பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டம் முடிவில் வணிகவரித்துறையில் கடந்த ஆண்டு சிறப்பாக பணிபுரிந்த உயர் அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வணிகவரித்துறையில் அதிக வருவாயை ஈட்டி தந்த வணிகவரித்துறை சென்னை தெற்கு இணை கமிஷனர் இந்திரா உட்பட பாராட்டு சான்றிதழை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். விழாவில் வணிகவரித்துறை கமிஷனர் ஜெகநாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) பூங்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.