கலாச்சார பரிமாற்றத்திற்காக ஜப்பான் செல்லும் 7-ம் வகுப்பு குழந்தை திவ்யஸ்ரீ.
ஆசிய பசிபிக் குழந்தைகள் மாநாட்டில்
ஜப்பான் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஜப்பான் முனிசிபல் கார்ப்பரேஷன் உடன் இணைந்து வரும் ஜூலை 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 10 நாட்கள் ஆசிய பசிபிக் குழந்தைகள் மாநாடு நடத்துகின்றனர்.
இந்த மாநாட்டில் 61 நாடுகளில் இருந்து190 குழந்தைகள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவிலிருந்து தலா 2 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேரில் மதுரை டிவிஎஸ் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் அழகப்பன் நகரை சேர்ந்த திவ்யஸ்ரீ வீரமணி என்ற குழந்தை கலை மற்றும் கலாச்சார பரிமாற்ற பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மாணவி திவ்யஸ்ரீ கலந்துகொண்டு தமிழர்களின் கலை மற்றும் கலாச்சாரங்களை பிரதிபலித்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.