ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 மதுரை ராயல் ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
கவர்னர் ராஜா கோவிந்தசாமி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 மதுரை ராயல் ரோட்டரி சங்கத்தின் தலைவராக இன்ஜினியர் பிரவீன் குமார் பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்பு விழாவிற்கு உடன் முன்னாள் தலைவர் கோபிசன் தலைமை தாங்கினார்
2025-26 ஆம் ஆண்டின் மதுரை ராயல் ரோட்டரி சங்கத்தின் தலைவராக பிரவீன் குமார், செயலாளராக பாலமுருகன், பொருளாளராக விஜய் ஆகியோர் நேற்று பதவி ஏற்று கொண்டனர்.
உடன் முன்னாள் கவர்னர் ராஜா கோவிந்தசாமி ரோட்டரி காலரை அணிவித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆண்டனி பிரேம்குமார், ரமேஷ், உதவி கவர்னர் நெல்லை பாலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவின் போது ராயல் கிளப் சார்பில் ராயல் கிங் என்ற புதிய ரோட்டரி சங்கம் உருவாக்கப்பட்டது.
பரதநாட்டியம், சிலம்பம் மற்றும் யோகா கலைகளில் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச கோல்டு மெடல் பெற்ற மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவி சிந்துஜாவை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினர்.
விழாவில் முன்னாள் தலைவர்கள் ஜெயக்குமார், தினேஷ் பாபு ஆகியோர் விழாவை ஒருங்கிணைப்பு செய்தனர். பிற ரோட்டரி சங்கங்களின் தலைவர், செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.