தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் திருமுருகன் வெளியிடுள்ள அறிக்கையில்,
தொழிலாளர்களின் மேல் இரட்டை அழுத்தம்.
அப்பளம், வடகம், மோர் வத்தல் மற்றும் சிறிய உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் பாரம்பரிய உணவுப் பொருட்கள் இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சிறந்த தொழில்களில் ஒன்றாகும். இத்துறையில் வீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே ஜிஎஸ்டி, வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ், ஆண்டுதோறும் கணக்குகள், தரவுகள், சான்றிதழ்கள் என கடுமையான நெறிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது FSSAI மூலம் வருடாந்திர அறிக்கைகள் தவறாக இருந்தால் சிறை அல்லது அபராதம் என அறிவிக்கப்படுவது, ஒரே தொழிலாளருக்கு இரட்டை (double) தண்டனை ஏற்படுத்தும் அளவுக்கு செல்லக்கூடியது. ஏற்கனவே மத்திய கட்டுப்பாட்டில் உள்ள கணக்குகளை இன்னொரு மத்திய துறை (FSSAI) நேரடியாக ஆய்வு செய்வது, தொழிலாளர்களின் மீது அழுத்தம் ஏற்படுத்துகிறது.
சட்டங்கள் மக்கள் நலனுக்கே ஆனதாக இருக்க வேண்டும். ஆனால் இவை தற்போது மக்கள் மீது நிறைய சட்டங்களை கொட்டும் நிலைக்கு சென்றுவிட்டன.
இத்தகைய கட்டுப்பாடுகள் சிறு மற்றும் இடைநிலை தொழிலாளர்களை பயமுறுத்தும் வகையில் உள்ளது. கணக்கியல் குற்றமாக கருதப்படக்கூடிய சாதாரண பிழைகளுக்கு கூட கடுமையான தண்டனை வகுக்கப்படுகிறது.
எனவே, இந்த புதிய நடைமுறை தேவையற்றது. உணவுப் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதற்கான கண்காணிப்பு ஏற்கனவே ஜிஎஸ்டி மூலம் நடப்பதால், இன்னொரு துறை அதில் தலையிடுவதை தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர். பாரம்பரியத் தொழில்களை வளர்த்தெடுக்க வேண்டிய நேரத்தில், இப்படிப் பதறவைக்கும் கட்டுப்பாடுகள் வருவது வருத்தமானது.
எனவே மத்திய அரசு இந்த நடைமுறையை மீளாய்வு செய்ய வேண்டும். சீரான மற்றும் சுருக்கமான கணக்குப் பொறுப்புகள் இருக்க வேண்டும். ஒரு துறையின் கீழ் கண்காணிப்பு போதுமானது.
பொதுமக்களின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் அதேபோல், அந்த உணவு உருவாக்குபவரின் நலனும் மதிக்கப்பட வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் .