திருப்புவனம் காவல் நிலையத்தில் நடந்த லாக்கப் மரணம் வழக்கில் முதல் நேரடி சாட்சியான சக்தீஸ்வரனுக்கு இரண்டு போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் என்பவர் மானாமதுரை டி.எஸ்.பி தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டும் சிவகங்கை மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படும் அரசு நடவடிக்கை எடுத்தது.
மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக முதல்வரும் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இந்நிலையில் மதுரை ஹைகோர்ட் கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது போலீசார் அஜித்குமாரை அடித்தபோது வீடியோ படம் எடுத்து அதை சாட்சியாக கொடுத்த கோயில் ஊழியர் சக்திஸ்வரன் இந்த வழக்கின் முதல் நேரடி சாட்சியாக நியமிக்கப்பட்டார்.
இதை எடுத்து அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோர்ட் பரிந்துரை செய்தது.
இந்நிலையில் அஜித் குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முதல் குற்றவாளியான ராஜா என்ற போலீஸ்காரரின் ரவுடி நண்பர் சக்திஸ்வரனை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சக்திஸ்வரன் டிஜிபிக்கு மனு செய்திருந்தார். இந்நிலையில் சக்திஸ்வரனுக்கு இரண்டு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.