Hot News :
For Advertisement Contact: 9360777771

காக்கா வடை தூக்கியதுபோல், தங்க நகையை தூக்கிய காக்கா

© News Today Tamil

காக்கா வடை தூக்கிய கதை கேட்டிருப்போம், இங்கு காக்கா தங்க நகையை தூக்கிய சம்பவத்தால், ஒரு நேர்மையாளரை வெளிப்படுத்தியுள்ளது


கேரளா - மலப்புரம் மாவட்டம் : திருக்கலங்கோடு பகுதியைச் சேர்ந்த ஹரிதா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துணி துவைக்கும் வேளையில்,

தனது ஒன்றரை பவுன் எடையுள்ள தங்க வளையலை கழட்டி வைத்த போது ஒரு காகம் அதனை தூக்கி கொண்டு பறந்தது. 

காக்கா தூக்கி சென்ற நகையை தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. தங்கம் தொலைந்துவிட்டதாக நினைத்து அவர்கள் நம்பிக்கை இழந்தனர். 

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு பகுதியில் வீட்டில் மாம்பழம் பறிக்க ஏறிய தென்னை ஏறும் தொழிலாளியான அன்வர் சதாத் மாமரத்தின் மேலே காகத்தின் கூட்டிலிருந்து தங்க நகை கீழே விழ, அதை கீழே மாங்காய் பறக்கி கொண்டிருந்த அன்வர் சதாத் மகள் அதை எடுத்து தந்தையிடம் கொடுக்க,

அன்வர் சதாத், நகையின் உரிமையாளரிடம் ஒப்படைக்க, அக்கம்பக்கம் விசாரித்தும் யார் என தெளிவு கிடைக்காததால்,

திருக்கலங்கோடு பொது நூலகத்திற்குச் சென்று தகவல் தெரிவித்து, அதன் அறிவிப்பு பலகையில் விளம்பரப்படுத்தியதை அறிந்து, நகை உரிமையாளர் ஹரிதா வளையல் வாங்கிய பில்லையும் அதை அணிந்திருந்த போட்டோவையும் காட்டி தங்க வளையலை பெற்றார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன ஒன்றரை பவுன் நகையை யாரும் உரிமை கொண்டாட வராத நிலையில், 

அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாமல் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் சதாத் நேர்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post அதிமுக கூட்டணியில் பாமக?: அன்புமணி ராமதாஸ் சூசகம்!
Next Post காஞ்சி சங்கராச்சாரியாரிக்கு திருப்பதியில் பிக்ஷாவந்தனம் நிகழ்ச்சி
Related Posts