ராமேஸ்வரம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சியில் இருந்து நாள்தோறும் காலை 7.05 மணிக்கு ராமேஸ்வரம் செல்லக் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16849), ஜூலை 7, ஜூலை 8, ஜூலை 9, ஜூலை 10, ஜூலை 11 மற்றும் ஜூலை 14, ஜூலை 15 ஆகிய நாட்களில் மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும். மானாமதுரை- ராமேஸ்வரம் இடையேயான இந்த ரயில் சேவைகள் மேலே குறிப்பிட்ட நாட்களில் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 3 மணிக்கு திருச்சிக்குப் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16850) ஜூலை 7, ஜூலை 8, ஜூலை 9, ஜூலை 10, ஜூலை 11 மற்றும் ஜூலை 14, ஜூலை 15 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படாது; மேலே குறிப்பிட்ட நாட்களில் மானாமதுரையில் இருந்து திருச்சிக்கு காலை 6.55 மணிக்கு இந்த எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும்.
அதே போல, ராமேஸ்வரத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் சார்லபள்ளிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் ( வண்டி எண் 07696) ஜூலை 4 மற்றும் ஜூலை 11 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக இரவு 7 மணிக்கு அதாவது சுமார் 9.50 மணிநேரம் தாமதமாக புறப்படும்.
கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16322) இன்று ஜூலை 3-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். திண்டுக்கல்- நாகர்கோவில் இடையே இந்த ரயில் சேவை இயக்கப்படாது. கன்னியாகுமரியில் இருந்து ஹவுரா செல்லும்( வண்டி எண் 12666) எக்ஸ்பிரஸ் ரயில், ஜூலை 5, ஜூலை 12 ஆகிய நாட்களில் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது;
இதற்கு மாற்றாக விருதுநகர்- மானாமதுரை- காரைக்குடி- திருச்சி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண் 07229) ஜூலை 4, ஜூலை 11 ஆகிய நாட்களில் மதுரை- திண்டுக்கல் வழியாக இயக்கப்படாது; விருதுநகர்- மானாமதுரை- திருச்சி வழியாக இயக்கப்படும். நாகர்கோவிலில் இருந்து ஜூலை 20-ம் தேதி காலை 6.15 மணிக்கு மும்பைக்கு புறப்படும் ( வண்டி எண் 16352) எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை- திண்டுக்கல் வழியாக செல்லாது; விருதுநகர்- மானாமதுரை- காரைக்குடி- திருச்சி வழியாக இயக்கப்படும்.
மதுரை- காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 07192) ஜூலை 9-ம் தேதி 1.20 மணிநேரம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.