சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் லாக்கப் மரணத்தைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய எஸ் பி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ள குற்ற வழக்கு தொடர்பாக மடப்புரம் காளியம்மன் கோவில் தற்காலிக பணியாளர் அஜித் குமார் என்பது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மானாமதுரை டி.எஸ்.பி யின் தனிப்படை போலீசார் விசாரணையின் போது அஜித்குமார் இறந்தார்.
இது தொடர்பாக மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டு சிவகங்கை மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த வழக்கு சிபிஐ போலீசாரால் இன்று முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலியாக இருந்த மானாமதுரை டிஎஸ்பி பணியிடத்திற்கு காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் நியமிக்கப்பட்டார்.
காலியாக இருந்த சிவகங்கை மாவட்ட எஸ்பி பணியிடத்திற்கு தேனி மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட எஸ் பி ஆக இருந்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ் பி ஆசிஷ் ராவத் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரு ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட தமிழகம் முழுவதும் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.