Hot News :
For Advertisement Contact: 9360777771

சிவகங்கையில் பயங்கரம்: இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை!

© News Today Tamil

சிவகங்கை அருகே இளைஞரை ஓட ஓட விரட்டிக் கொலை செய்த கும்பல் காரில் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தமறாக்கி கிராமத்தை சேர்ந்தவர் செல்லச்சாமி. இவரது மகன் மனோஜ் பிரபு (29) வெளிநாட்டில் பணிபுரிந்து அண்மையில் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.  இவரது குடும்பம் சக்கந்தி கிராமத்தில் வசித்து வருகிறது. இந்த  நிலையில் மனோஜ் பிரபு தனது நண்பர்கள் ஹரிகரன், அஜித்குமார் ஆகியோருடன் அருகில் உள்ள இடையமேலூர் திருவிழாவில் நடைபெறும் கலைநிகழ்ச்சியைப் பார்க்க நேற்று இரவு சென்றார்.

இதன் பின் நிகழ்ச்சி முடிந்து மனோஜ் பிரபு மற்றும் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் சக்கந்தி நோக்கி சென்றுள்ளனர். அப்போது புதுப்பட்டி அருகே காரில் வந்த மர்மக் கும்பல்  இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளியது.  இதனால் பயந்து போன மனோஜ் பிரபு உள்ளிட்டோர் தப்பியோட முயன்றனர்.

ஆனால், அந்த கும்பல் மனோஜ் பிரபுவை மட்டும் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்து விட்டு காரில் ஏறி தப்பிச்சென்றது. இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த மனோஜின் நண்பர்கள், சம்பவம் குறித்து உடனடியாக சிவகங்கை நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் டூவீலரில் இருந்து விழுந்ததால் காயமடைந்த மனோஜின் இரு நண்பர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோஜ் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


----

ஆசிரியர் கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post ரோமில் பயங்கரம்... பெட்ரோல் நிலையம் வெடித்து தீப்பிடித்ததால் 45 பேர் படுகாயம்!
Next Post சிவகங்கையில் பயங்கரம்: இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை!
Related Posts