பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷியா அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.
ரஷ்யாவின் மக்கள்தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிக்க கர்ப்பிணிப் பெண்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை ரஷ்யா தொடங்கியிருந்தது. ஆனாலும், இந்த திட்டத்தால் பெரியவர்கள் மட்டுமே பயனடைந்தனர்.
அதனால் இந்த திட்டம் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவிகள் குழந்தை பெற்று கொண்டால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷ்யா அரசு அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பின் படி, ரூ.1,08,595.20 ஆகும். ரஷ்யாவின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு, ரஷ்யாவில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ரஷ்யாவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2023-ம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 1.41 ஆக உள்ளது. இது முன்பு 2.05 ஆக இருந்தது. இதற்கிடையில்,பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து கருத்து கணிப்பும் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யா பொது கருத்து ஆராய்ச்சி மையம் இந்த கருத்துக் கணிப்பில் 43 சதவீதம் பேர் ரஷ்யாவின் புதிய கொள்கையை ஆதரித்துள்ளனர். 40 சதவீதம் பேர் எதிர்த்துள்ளனர்.