Hot News :
For Advertisement Contact: 9360777771

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை நீக்க பதில் அளிக்க தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவு

© News Today Tamil

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆவண பட தயாரிப்பு நிறுவனத்துக்கும், நெட் ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரித்தது. இந்த ஆவணப்படம், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த ஆவணப்படத்தில், தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் நானும் ரவுடி தான் பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி பெறாமல், சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டி, படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்னேஷனல் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ஆவண படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் நோட்டீஸ் அனுப்பியும், இன்னும் அவற்றை பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி , மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, டார்க் ஸ்டூடியோவுக்கும், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.


----

ஆசிரியர் கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு ரத்து
Next Post செல்போன் செயலி மூலம் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு
Related Posts