Hot News :
For Advertisement Contact: 9360777771

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: ஜூலை 21-ல் தொடங்குகிறது!

© News Today Tamil

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “2025  ஜூலை 21-ம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான அரசின் முன்மொழிவை இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அங்கீகரித்துள்ளார்.

சுதந்திர தினக்கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களில் நாடாளுமன்றத்தில் எந்த அமர்வும் இருக்காது” என்று அவர் பதிவிட்டுள்ளார். 

----

ஆசிரியர் கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post லாக்கப் கொலை வழக்கில் நேரடி சாட்சிக்கு பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு மனு.
Next Post பயணிகளின் கனிவான கவனத்திற்கு... ரயிலில் ராமேஸ்வரம் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Related Posts