சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோவில் தற்காலிக பணியாளர் அஜித்குமார் திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தனிப்படை போலீசார் அஜித்தை அடித்ததில் அவர் மரணமடைந்தார்.
இது குறித்து திருப்புவனம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ஐந்து போலீசாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தனிப் படை போலீசாரை நியமித்த திரு சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆசிஷ் ராபர்ட் அதிரடியாக மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி சந்திஸ் சிவகங்கை மாவட்ட எஸ் பி ஆக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மானாமதுரை டிஎஸ்பி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஐகோர்ட் மதுரை கிளையில் நடைபெற்றது.
தனிப்படை போலீசாரை நியமித்தது யார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப அரசு தரப்பில் மாவட்ட எஸ்பிஐ தனிப்படை போலீசார்தான் விசாரணை மேற்கொண்டனர் என்று பதில் தெரிவிக்கப்பட்டது.
அப்படியானால் எஸ்பி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
தமிழக அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி இது கொலைக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார் நீதிபதிகள்.
இந்த வழக்கு தொடர்பாக சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்ப பதில் கூற முடியாமல் அரசு தரப்பு திணறியது.