ஹைட்ரஜன் வாகனங்களுக்கு இனி பச்சை - நீலத்தில் நம்பர் பிளேட் பொருத்தப்படும்!
ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் வாகனங்களுக்கான புதிய வகை பதிவு எண் தகடுகளை பொருத்த தேசிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வரைவு அறிவிப்பின்படி, ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் வணிக வாகனமாக இருந்தால், நம்பர் பிளேட்டின் மேல் பாதி பச்சை நிறத்திலும், கீழ் பாதி நீல நிறத்திலும் இருக்கும், நம்பர் பிளேட்டின் எண்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.