Hot News :
For Advertisement Contact: 9360777771

'இனி சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் உத்தரவு

© News Today Tamil

ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் துறையின்கீழ் செயல்பட்டு வரும் 727 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 41,194 மாணவ மாணவிகளும், 455 மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 26,653 மாணவ மாணவிகளும், 157 சீர்மரபினர் விடுதிகளில் 9,372 மாணவ மாணவிகளும், 20 சிறுபான்மையினர் நல விடுதிகளில் 1.250 மாணவ மாணவிகளும் தங்கிப் பயின்று வருகின்றனர்.

அதே போல ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,332 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் 98.909 மாணவ மாணவியர்களும், 48 பழங்குடியினர் விடுதிகளில் 2,190 மாணவ மாணவியர்களும் சேர்ந்து பயின்று வருகின்றனர். இவ்வாறு மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,739 விடுதிகளில் 1,79,568 மாணவ மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் – சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்”!  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

----

ஆசிரியர் கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பங்கள்: வீடு தேடி வருகிறது!
Next Post பள்ளி மாணவி கர்ப்பமானால் ரூ.1 லட்சம் பரிசு: ரஷ்யா அரசு அதிரடி அறிவிப்பு!
Related Posts