அனுமதி அற்ற கட்டடம் மற்றும் அனுமதிக்கு அதிகமாக உள்ள கூடுதல் கட்டடம் ஆகியவற்றிற்க்கு புதியதாக வரி போடும்போது இதுநாள் வரை சதுரடிக்கு 20 முதல் 25 ரூபாய் வரை அபராதம் மட்டுமே பெறப்பட்டு வந்தது.
இனிமேல் வரும் ஜூலை 1 முதல் அனுமதி அற்ற மற்றும் அனுமதிக்கு அதிகமாக கூடுதல் கட்டடங்களுக்கு குடியிருப்பு கட்டடங்களுக்கு சதுரடிக்கு 88/= ரூபாயும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு சதுரடிக்கு 110/= ரூபாயும் அபராத தொகையாக வசூல் செய்யப்படும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சுட்ட அறிக்கையை அனுப்பி உள்ளார் .
இதன் மூலம் புதிதாக வரி விதிக்கப்படும்போது அபராத தொகை கூடுதலாக வசூலிக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக தெரிகிறது.