சமஸ்கிருத மொழியை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு ரூ.2,533.59 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
இதே 10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு ஒதுக்கியதை விட 17 மடங்கு கூடுதல் நிதி சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆண்டுதோறும் சமஸ்கிருதத்திற்கு ரூ.230.24 கோடி ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு தமிழுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு ரூ.2532.,59 கோடியும், தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து மொழிகளுக்கும் சேர்ந்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.