அண்ணாவுக்கு பதில் அமித்ஷா? அதிமுக கொடியில்
வைரல் ஆன கார்ட்டூன் படம்
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவை கேலிச்சித்திரமாக வரைந்து திரையிட்டு இருந்தனர்.
அண்ணாவை விமர்சித்து கேலிச்சித்திரம் வைக்கப்பட்ட மேடையில் அண்ணா பெயரில் உள்ள அதிமுகவினர் கலந்து கொண்டது குறித்து திமுக உட்பட அதிமுகவின் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
அதிமுக தரப்பில் இதற்கு விளக்கம் கொடுத்தாலும் திராவிட கட்சிகள் சார்பில் பலத்த விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக கொடியில் அண்ணாவுக்கு பதில் அமித்ஷா படத்தை வைத்து 'இனி அதிமுக இப்படித்தான்' என்று கேலிச்சித்திரங்கள் வரைந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தற்போது இது பேசப்படும் பொருளாக மாறி வருகிறது.