அரசு முறை பயணமாக இந்திய வந்துள்ள ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவது குறித்து இரண்டு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்பின் இரண்டு நாட்டு முக்கி பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எரிசக்தி, வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் கையெழுத்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் புடினுக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார்.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி மாளிகையில் இன்று (டிசம்பர் 5) காலை ரஷ்ய அதிபர் புடினுக்கு முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவரை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதன் பிறகு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு சென்ற புடின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் ஜனாதிபதி அளிக்கும விருந்தில் பங்கேற்கும் புடின் இன்று இரவு மாஸ்கோ புறப்பட்டு செல்கிறார்.

