தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட டிட்வா, சென்யார் புயலுக்கு இதுவரை 1,140-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான டிட்வா, சென்யார் புயல்களால் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, தாய்லாந்து, இலங்கையை கபளீகரம் செய்தது. அத்துடன் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை நோக்கி டிட்வா மையம் கொண்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்யார் புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் இந்தோனேஷியாவில் மட்டும் 604 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். டிட்வா புயலால் இலங்கையில் 366 பேரும், சென்யார் புயலால் தாய்லாந்தில் 176 பேரும், மலேசியாவில் 3 பேரும் பலியாகியுள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். இலங்கையில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையை தாக்கிய மிக மோசமான இயற்கைப் பேரிடர் என, கூறப்படுகிறது. இலங்கையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.




