Hot News :

30 நாளில் 1,200 இண்டிகோ விமானங்கள் ரத்து- விசாரணை நடத்த உத்தரவு

© News Today Tamil

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1,200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது குறித்து இண்டிகோ  நிறுவனத்திடம் விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் இண்டிகோவும் ஒன்றாகும். நேற்று ஒரே நாளி நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையை இண்டிகோ ரத்து செய்தது. டெல்லி விமான நிலையத்தில் 38 விமானங்களும், மும்பை விமான நிலையத்தில் 33 விமானங்களும், அஹமதாபாத்தில் 14 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1,232 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 755 விமானங்களும், வான் போக்குவரத்து கட்டுப்பாடு கோளாறு காரணமாக 92 விமானங்களும், விமானம் மற்றும் விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் 258 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தங்களது விமானங்கள் ரத்தானது குறித்து பயணிகளிடம் இண்டிகோ நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், விமான சேவைகளை தடையின்றி வழங்குவதில் நிலவும் பிரச்னைகளை சரிசெய்து, அடுத்த 48 மணிநேரத்திற்கான அட்டவணையில் மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் மட்டும் 1,200-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன் விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் நிதி- மத்திய அரசு திட்டவட்டம்
Next Post நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்- நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
Related Posts