Hot News :

ஜி 20 வெப்சைட்டில் தென்னப்பிரிக்கா பெயர் நீக்கம்- டிரம்ப் அதிரடி

© News Today Tamil

ஜி20 சமூக வலைதளத்தில் இருந்து தென்னப்பிரிக்காவின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட்டி டிரம்ப் அதிரடியாக நீக்கியுள்ளார். 

ஜி - 20 நாடுகளில்  இந்தியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றிருந்தன. நடப்பாண்டுக்கான ஜி - 20 நாடுகளின் தலைமை பொறுப்பை தென்னாப்பிரிக்கா வகித்தது. அடுத்த ஆண்டுக்கான(2026) பொறுப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று (டிசம்பர், 1) முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை  ஜி - 20 தலைமை பொறுப்பை அமெரிக்கா ஏற்றுள்ளது. 

2026-ம் ஆண்டு புளோரிடாவில் மியாமியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க தென்னப்பிரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். உலகின் எந்தவொரு அமைப்பிலும் உறுப்பினராக இருக்க தகுதியற்ற நாடு என்பதை தென்னப்பிரிக்கா நிரூபித்துவிட்டதாக டிரம்ப்  விமர்சித்தார்.

மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், வெள்ளை இன மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும் கூறி, தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்த உச்சி மாநாட்டை, அமெரிக்க அதிபர் டிரம்ப் புறக்கணித்தார். ஜி 20 மாநாட்டின் முடிவில், தலைமை பொறுப்பை அமெரிக்க துாதரகத்தின் மூத்த பிரதிநிதியிடம் ஒப்படைக்க தென் ஆப்ரிக்கா மறுத்துவிட்டது.

இந்த நிலையில், ஜி  20 சமூக வலைதளத்தில் டிரம்பின் கருப்பு, வெள்ளை நிறப்படம் இடம்பெற்றுள்ளது.  அத்துடன் தென்னாப்பிரிக்காவின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ஜி20 வலைதளம் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post முதல்வர் தொகுதியில் 10,000 இறந்தவர்களின் ஓட்டுகள்- நயினார் நாகேந்திரன் பேட்டி
Next Post கரூர் துயரம்... சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மனு
Related Posts