Hot News :

வர்த்தகர்கள் மகிழ்ச்சி - சிலிண்டர் விலை குறைப்பு

© News Today Tamil

வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 காசுகள் குறைந்து, ஒரு சிலிண்டர்  1,739.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ஆயில் நிறுவனங்கள் மாற்றம் செய்கின்றன. 

அந்த வகையில் இன்று (டிச.1) முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 குறைந்தது. ஒரு சிலிண்டர் 1,739.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த செப் 1. ம் தேதி ரூ.51.50, ஆக1-ம் தேதி ரூ.33.50, ஜூலை 1-ம் தேதி ரூ.58.50, ஜூன் மாதம் ரூ.24 விலை குறைந்தது. கடந்த அக்.1-ம் தேதி ரூ.16 உயர்ந்தது. நவ. 1-ம் தேதி ரூ.4.50 குறைந்தது. கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. அதன் விலையில் இந்த மாற்றம் செய்யப்படவில்லை. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post வேன், அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து. 2 பெண்கள் பலி
Next Post காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ ரெய்டு
Related Posts