தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 10 ஆயிரம் இறந்தவர்களின் வாக்குகள் உள்ளது. அதனை நீக்குவதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தென்காசியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களின் ஆதரவுடன் சிறந்த ஆட்சி அமையும். எஸ்ஐஆர்ஐ வைத்து திமுகவினர் மக்களை குழப்பி, அவர்கள் தமது வேலைகளை பார்த்து வருகின்றனர். பிஹாரில் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது போல், தமிழகத்தில் சுமார் 75 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தெரிய வருகிறது.
இதில் 2002-ம் ஆண்டுக்குப பின்னர் இறந்தவர்களின் வாக்குகளே இருக்கும். உதாரணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நின்று வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் மட்டும் 10 ஆயிரம் வாக்குகள் இறந்தவர்களின் பெயரில் உள்ளன. அவற்றை நீக்குவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்" என்றார்.




