திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டிச.9- ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒத்தி வைத்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகைதீபம் ஏற்ற உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், திருப்பரங்குற்ம் கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோயிலில் உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றினர். இதனால் மதுரை ஆட்சியர், போலீஸ் கமிஷனர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மீது ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று (டிச.5) காலை மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கு விசாரணையை வரும் டிச.9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

